Thursday, August 18, 2016

நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம் 11

நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம்

ஜோதிடம் ஒரு பார்வை - ப்குதி 11

நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!

1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.

யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழக்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்

அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதியசமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.

பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.

1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.

1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூலகள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெறறு வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்

பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.

அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்

ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.

ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.

அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.

இதெல்லாம் வரலாறு!

அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!

இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?

ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!

(நாஸ்டர்டாமஸ் பற்றிய செய்திகள் நாளையும் வரும்!)

No comments:

Post a Comment