பின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 14
பின்னூட்ட மன்னர், சிங்கை இளவல், நாகைச் சூறாவளி
கோவி.கண்ணன் அவர்கள் இந்த ஜோதிடம் ஒரு பார்வை
பகுதி எண் 9ல் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
அதைப் பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!
அவருக்குப் பதில் கொஞ்சம் விரிவாகவே சொல்ல
விரும்பியதால் இந்தப் பதிவு. அவருடைய நியாமான
கேள்விக்கு உரிய பதிலை வகுப்புக் கண்மணிகளும்
தெரிந்து கொள்ளட்டும் எனத் தனிப் பதிவாகவே
இட்டுவிட்டேன்.
இதில் எதாவது அவருக்குச் சந்தேகம் இருந்தால
பதிவுக்குப் பதிவு என்று போகாமல் பின்னூட்டத்தி
லேயே கேட்கலாம்:-)))
///கோவியார் சொல்லியது:சுப்பைய்யா ஐயா,
மேலே குறி(ப்பிட்ட) சம்பவம் உண்மையா
இல்லை என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை.
பல சோதிடர்கள் நம்பவைக்க ஆட்களை தலை
ஆட்டுவதற்கும் கேள்விகளுக்காக தயார்
கதைகளையும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நேற்று தொலைக் காட்சி செய்தியில்
வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிடர்
செத்தவர் கைரேகையை பார்த்து ஆயுள்
கெட்டி என்று சொன்னதாக கூட செய்திகள்
வந்திருக்கின்றன.
சோதிடர் சொல்வது
எல்லாமே சரி என்றால் காணமல்
போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//
"உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை"
என்று கவியரசர் முன்பே எழுதிவைத்து
விட்டுப்போனார்.
இறைவனுக்கு மட்டுமல்ல - ஜோதிடத்திற்கும்
அதுதான் பதில். என் முதல் மூன்று பதிவுகளைப்
படித்துவிட்டு வாருங்கள்.
அரைகுறை ஜோதிடர்களால் ஜோதிடத்திற்கு
கெட்ட பெயர் ஏற்படுவது உண்மை. ஆனால்
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது
என்பதற்கு கடந்த எட்டுப் பதிவுகளிலும்
நிறைய ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.
அவற்றை எல்லாம் படியுங்கள்
இன்னும் கொடுக்க உள்ளேன் தொடர்ந்து
படியுங்கள்
யாரையும் பிடித்து இழுத்து வந்து ஜோதிடத்தை
நம்ப வைக்க வேண்டுமென்பது என்னுடைய
நோக்கமல்ல! எனக்குத் தெரிந்தவற்றை
எழுதுகிறேன் அவ்வளவுதான்.
ந்ம்புவதும், நம்பாததும் படிப்பவர்களின்
மனதில் உள்ளது!
நம்புவதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை
நம்பாவிட்டால் எனக்கு எந்தவிதமான
நஷ்டமும் இல்லை!
//சோதிடர் சொல்வது எல்லாமே சரி என்றால்
காணமல் போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//
"பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்
கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டிவைத்ததடா"
என்று எழுதினார் கவியரசர்.
இன்றைய நாகரீக உலகில் மிருக குணமுடைய
மனிதர்கள்தான் அதிகம். அத்னால்தான் போலீஸ்
நிலையங்கள் (உங்களைப் போன்ற நல்லவர்
களைக் காக்க)
திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு
முருகப் பெருமான் காட்சி கொடுத்து, அவருடைய
நோயைக் குணப்படுத்தியதுடன், முத்து என்று
அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழைப் பாட
வைத்தார் என்பது வரலாறு.
அதைச் சொன்னால், நான் ந்ம்ப மாட்டேன்,
ஒன்று அன்று நடந்ததற்கு ஏதாவது
'Strong Evidence' காட்டு அல்லது முருக்ப்
பெருமானை வரவழைத்து எனக்குக் காட்டு
என்றால் என்ன செய்வது?
எனது நெருந்கிய உறவினர் ஒருவர். தீவிர
நாத்திகவாதி. எனக்கு இனிய ந்ண்பரும்கூட.
அவருடைய தாத்தா தந்தைபெரியார்
அவர்களின் நெருங்கிய நண்பர். அந்தக்
காலத்தில், பெரியார் அவர்கள் எங்கள்
பகுதிக்கு வந்தால் அவர்கள் வீட்டில்தான்
தங்குவார். பெரியார் மட்டுமல்ல அந்தக்
காலத்தில் அறிஞர் அண்ணா
உட்பட பல தி.மு.க தலைவர்கள் காரைக்குடிக்கு
வந்தால் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள்.
இன்று சென்னையில் உள்ள ஒரு பெரிய
திரைப்பட இயக்குனருக்கும், மற்றும்
திராவிடர் கழகத்தில் உள்ள புகழ் பெற்ற பேச்சாளர்
ஒருவருக்கும் அவர் சகோதரியின் மகனாவார்.
அந்த உறவினருக்கும் எனக்கும் அடிக்கடி
தர்க்கவாதம் நடக்கும்.
அவர் கேட்பார், " கோவிலை ஏன் பூட்டுகிறீர்கள்?
தன் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள
உங்களுடைய இறைவனுக்குத் தெரியாதா?"
நான் சொல்வேன்," இறைவன் ஒன்றும் கோவில்
கட்டிக் கும்பிடு என்று சொல்ல்வில்லை. மேலும்
விலை உயந்த பஞ்சலோக சிலைகளையும்,
தங்க, வைர நகைகளையும் எனக்கு அணிவியுங்கள்
என்று சொல்லவில்லை. பகதர்கள் காலம் காலமாக
தங்கள் ப்கதி மிகுதியினால் அப்படிச் செய்கின்றார்கள்.
அதையே ஒருவன் உள்ளே வந்து
திருட முயன்றால், கருணை மிகுந்த கடவுள், பிழைத்துப்
போகட்டும், வயிற்றுப் பசிக்காகத் திருடுகிறான் என்று
கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார். அந்தத் திருட்டு
நடந்தால் செய்து வைத்த மக்களின் மனது எவ்வளவு
கஷ்டப்படும்? அதைத்தடுக்கவே கோவிலுக்குப்
பூட்டும், காவலும் உள்ளன!"
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இறைவன
இல்லை என்று வாதம் செய்யும் அவர், ஜோதிடத்தில்
மிகுந்த ந்ம்பிக்கை உள்ளவர்.அவர்தான் எனக்கு இந்த
ஜனவெளி ஜோதிடரைப் பற்றி முதன் முதலில்
தகவல் தந்தவர்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்!
அன்புடன்
No comments:
Post a Comment